பெட்ரோல் விலை உயர்வு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது – பாஜக பிரமுகர் குஷ்பு

வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் சலுகை தந்திருப்பதால் பெட்ரோல் விலை உயர்வு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பாஜக பிரமுகர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பிரமுகர் மற்றும் நடிகையுமான குஷ்பு, உலக முழுவதும் இந்த கொரோனா வைரஸால் பொருளாதார ரீதியாக மிக பெரிய பாதிப்பு எல்லாருக்கும் இருக்கு. ஆனால் இதே சமயத்தில் பட்ஜெட் தாக்கல் வரும்போது, பொதுமக்கள் பாதிப்படைய கூடாது என்று எந்தவொரு வரியையும் மத்திய அரசு கொண்டு வரவில்லை. இது மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது என கூறியுள்ளார்.
வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு சலுகை அளித்துள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த சலுகை எல்லாம் பார்க்கும்போது, கொண்டுவரும் போதும் பெட்ரோல் விலை 2 ரூபாய் ஏறிடிச்சின்னா கொஞ்சம் வலி இருக்கும். ஆனா, நல்லது நடக்க போகுது என்று நினைத்துக்கொண்டு கொஞ்சம் தாங்கிக்கொண்டால் நல்ல இருக்கும். பெட்ரோல் விலை உயர்வு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் விரைவில் குறையும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025