‘மாதாந்திர பஸ் பாஸ்’ கட்டணத்தை ரூ.1000 இருந்து ரூ.1300 ஆக அதிகரிக்கும் முயற்சியை உடனே கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், முதல்வர் கொடியசைத்து துவக்கி வைக்க வேண்டும் என்பதற்காக புதிதாக வாங்கப்பட்ட 448 பேருந்துகள் இயக்கப்படாமல் “வாரண்டி” காலத்தை இழக்கும் அபாயத்தில் பணிமனைகளில் நின்று கொண்டிருப்பதற்கு மோசமான நிர்வாகமே காரணம். கட்டணத்தை உயர்த்த துடிக்கும் அரசு, 448 பேருந்துகளை இயக்காமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் ஏழை-எளிய நடுத்தர மக்கள் பயன்படுத்தி வரும் ‘மாதாந்திர பஸ் பாஸ்’ கட்டணத்தை ரூ.1000 இருந்து ரூ.1300 ஆக அதிகரிக்கும் முயற்சியை உடனே கைவிட வேண்டும். ஏற்கனவே, 100%க்கும் மேல் கட்டண உயர்வை அமல்படுத்தி விட்டு,மீண்டும் “சேடிஸ்ட்” மனப்பான்மையோடு அதிமுக அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…