ரூ.1000 இருந்து ரூ.1300 ஆக உயரும் ‘மாதாந்திர பஸ் பாஸ்’ கட்டணம் ..!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

Default Image

‘மாதாந்திர பஸ் பாஸ்’ கட்டணத்தை ரூ.1000 இருந்து ரூ.1300 ஆக அதிகரிக்கும் முயற்சியை உடனே கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Image result for மு.க.ஸ்டாலின்

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,  முதல்வர் கொடியசைத்து துவக்கி வைக்க வேண்டும் என்பதற்காக புதிதாக வாங்கப்பட்ட 448 பேருந்துகள் இயக்கப்படாமல் “வாரண்டி” காலத்தை இழக்கும் அபாயத்தில் பணிமனைகளில் நின்று கொண்டிருப்பதற்கு மோசமான நிர்வாகமே காரணம். கட்டணத்தை உயர்த்த துடிக்கும் அரசு, 448 பேருந்துகளை இயக்காமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல்  ஏழை-எளிய நடுத்தர மக்கள் பயன்படுத்தி வரும் ‘மாதாந்திர பஸ் பாஸ்’ கட்டணத்தை ரூ.1000 இருந்து ரூ.1300 ஆக அதிகரிக்கும் முயற்சியை உடனே கைவிட வேண்டும். ஏற்கனவே, 100%க்கும் மேல் கட்டண உயர்வை அமல்படுத்தி விட்டு,மீண்டும் “சேடிஸ்ட்” மனப்பான்மையோடு அதிமுக அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது என்றும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்