சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
இந்நிலையில்,சென்னையில் கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில்,124-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
100 நாட்களை கடந்தும் பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படாமல் உள்ளது என வாகன ஓட்டிகள் ஏற்கனவே கவலைக் கொண்டிருக்கும் நிலையில்,உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக இந்தியா வாங்கும் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 130 டாலராக அதிகரித்துள்ளது. 2012 ஆம் ஆண்டிற்குப் பின் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
இதனிடையே, இந்தியாவில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.தேர்தல் காரணமாக இதுவரை உயர்த்தப்படாத பெட்ரோல், டீசல் விலை இனி வரும் நாட்களில் லிட்டருக்கு ரூ.23 வரை உயரலாம் என கூறப்படுகிறது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…