கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமாருக்கு கொரோனா.!
கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமாருக்கு கரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானதை அடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.