தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக நேற்றய தினம்கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
இதைதொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக சென்னை தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது. தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது.
பிறகு தீவுத்திடலிருந்து மதியம் 1.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்த் உடல்..!
அவரது மறைவுச் செய்தியை தாங்க முடியாத மக்கள் சென்னை தீவுத் திடல் பகுதிக்கு கூட்டம், கூட்டமாக சென்று நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் உள்ள வணிகர்கள், கேப்டன் விஜயகாந்துக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒருநாள் தங்களது கடைகளை அடைத்துள்ளனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…