கோலாகலமாக கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹாரம் – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

Default Image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக இன்று மாலை கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இன்று கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக சூரசம்ஹார நிகழ்வு மாலை நடைபெற உள்ளது. வருடம்தோறும் கடற்கரையில் நடைபெறும் இந்த சூரசம்ஹார நிகழ்வுக்கு இந்த வருடம் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தாலும், பக்தர்கள் மற்றும் கோவில் பூசாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க நீதிமன்றத்தில் இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், வழக்கம்போல கடற்கரையில் கோலாகலமாக நடைபெற உள்ள இந்த சூரசம்ஹார விழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கோவில் வளாகங்கள் மண்டபம் விடுதி என எதிலுமே பக்தர்கள் தங்கள் கூடாது எனவும் கோவில் நிகழ்ச்சிகள் அனைத்தையும் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் மூலமாக மட்டுமே மக்கள் பார்த்துக் கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. வருடம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடக்கக்கூடிய சூரசம்ஹார நிகழ்வில் இந்த வருடம் கலந்து கொள்ள முடியவில்லை என்ற கவலை மக்களுக்கு இருந்தாலும், நேரலையிலாவது பார்க்க முடியும் என்ற சந்தோஷத்தில் மக்கள் தற்பொழுது உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்