ரிங் மாஸ்டர் மீது கட்சியினர் சீற ஆரம்பித்துவிட்டனர்’-தினகரனை சாடிய அமைச்சர் ஜெயக்குமார்
ரிங் மாஸ்டர் மீது கட்சியினர் சீற ஆரம்பித்துவிட்டனர்’என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், ரிங் மாஸ்டர் போல் செயல்பட நினைத்த தினகரன் மீது அவரது கட்சியினர் சீற ஆரம்பித்துவிட்டனர்.சசிகலா, தினகரன் தவிர்த்து அமமுகவில் இருந்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.அமமுகவில் இருந்து பலரும் அதிமுகவிற்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கதமிழ்ச்செல்வனை கட்சியில் இணைப்பது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும்.கொள்கை, கோட்பாடு, லட்சியம் இல்லாத கட்சிக்கு இதுதான் நிலை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.