மாற்றுத்திறனாளிகளுக்கான RIGHTS திட்டம் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

RIGHTS திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.2.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
உலகிலேயே முன்மாதிரியாக மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் RIGHTS திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.2.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு விடுபடாமல் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் ரூ.1702 கோடியில் RIGHTS திட்டம் செய்லபடுத்தப்பட உள்ளது. உலகவங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு ஆலோசகர்களை நியமிக்க நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான பல்வேறு அம்சங்கள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, உலக வங்கியின் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் ’Rights’ திட்டம் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025