#Breaking:சற்று முன்…புரட்சிப் பயணம் – ஆக்சனில் இறங்கிய சசிகலா!
ஒற்றைத் தலைமை பிரச்சனையால் அதிமுகவில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.இந்நிலையில்,சென்னை தியாகராய நகரில் இருந்து புரட்சிப் பயணம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் ஓராண்டுக்கு பிறகு தற்போது அரசியல் பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளார்.
அந்த வகையில்,சென்னையிலிருந்து திருத்தணிக்கு செல்லும் சசிகலா, அங்குள்ள எம்ஜிஆர்,அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்க உள்ளார் என்றும்,அதன்பிறகு கட்சி தொண்டர்களை சந்தித்து பல்வேறு விசயங்கள் குறித்து பேசவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை எழுந்துள்ள நிலையில்,சசிகலாவின் இந்த அரசியல் பயணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்று வரும் நாட்களில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம்,தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.அந்த வகையில்,தற்போது மதுரை சென்றுள்ள ஓபிஎஸ் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் அம்மா அவர்களுடைய உயிரிலும் மேலான தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் என்றும்,அவர்களின் இதயத்திலிருந்து என்னை யாராலும் நீக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,மாவட்ட வாரியாக நிர்வாகிகள் தொண்டர்களை சந்தித்து, அவர்களின் ஆதரவை திரட்டி,ஒற்றைத் தலைமை தீர்மானத்தை தடுக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும்,பொதுக்குழுவில் ஈபிஎஸ் தரப்பினர் தன்னை அவமானப்படுத்தியதை தொண்டர்களிடம் முறையிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.