“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!
நேற்று எங்கள் தலைவர் 3 நிமிஷம் பேசுனதுக்கே கோவை அதிருச்சு என்று ஆதவ் அர்ஜுனா அதிரடியாக பேசியிருக்கிறார்.

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில், கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தவெக முகவர்கள் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கு மேடையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பேசியதை தொடர்ந்து, தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ”ஊழலாட்சியை, அடிமை ஆட்சியை எதிர்க்க இங்கே புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது. இது மக்களுடைய செல்வாக்கு, இந்த இளைஞர்களை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என பேசுகிறார்கள்.
2026 தமிழக வெற்றிக் கழகத்திற்கான நாள். 2 நாட்களாக கோவை முடங்கிவிட்டது, வரலாறு உருவாகும்போது பழைய காலத்தை பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். வாக்குப்பதிவின்போது, கள்ள ஓட்டைத் தடுக்கும் சக்தி, தேர்தல் முகவர்களிடம் இருக்கிறது. தவறு நடந்ததாக குரல் கொடுத்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் அன்றை தினம் சீல் வைக்க முடியாது என்று அறிவுரை வழங்கினார்.