அதிமுக இபிஎஸ் அணிக்கு புரட்சி பாரதம் கட்சி முழு ஆதரவு…!
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு முழு ஆதரவு அளித்து தேர்தல் பணியில் ஈடுபடுவோம் என்று பூவை ஜெகன் மூர்த்தி பேட்டி.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், சின்னையா உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு கோரினார்
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, அதிமுக இபிஎஸ் அணிக்கு புரட்சி பாரதம் கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு முழு ஆதரவு அளித்து தேர்தல் பணியில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.