10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்.! விரைவில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு.! திமுக அமைச்சர் துரைமுருகன் தகவல்.!
உச்சநீதிமன்றம் வழங்கிய இடஒதுக்கீடு குறித்த தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என திமுக அறிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த உயர் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வு, மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் தீர்ப்பு வழங்கினர். இதில் மூன்று நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் எனவும் இரண்டு நீதிபதிகளும் அதற்கு எதிராகவும் வெவ்வேறு விதமான தீர்ப்புகளை வழங்கினார். பெரும்பாலானது மத்திய அரசின் இட ஒதுக்கீடு செல்லும் தீர்ப்பு என்பதால் இறுதியாக அந்த தீர்ப்பை வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பதிவிடுகையில், ‘ பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் 103 வது அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, ‘சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு’ என பார்க்கிறோம். என குறிப்பிட்டு இருந்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்விலேயே இரண்டு விதமான தீர்ப்பு வந்துள்ளது. அதில் வழக்கமான நடைமுறைப்படி பெரும்பான்மை பெற்றுள்ள தீர்ப்பு இறுதி தீர்ப்பாக வெளிவந்துள்ளது.
திமுகவை பொருத்தவரை இந்த வழக்கு ஆணித்தனமான வாதங்கள் எடுத்துரைக்கப்பட்டது. ஆனாலும் அரசியல் சட்டத்தின் அடையாளத்தை அடிப்படை அம்சத்தை அழிக்கும் விதத்தில் ஒரு அரசியல் சட்ட திருத்தம் அமையக்கூடாது என்பதுதான் இதுவரை பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப்பட்ட பொன்மொழி ஆகும்.
நாட்டில் உள்ள 82% பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதியை காப்பாற்றிட, அரசியல் சட்டத்தின் அடிப்படை கூட்டமைப்பை பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பின் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டிட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.