திரும்ப பெறப்பட்ட ரெட் அலெர்ட்! பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும்!
ரெட் அலெர்ட் விலக்கி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கனமழை காரணமாக விடுக்கப்பட்டிருந்த ரெட் அலெர்ட்டை வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு ‘வாபஸ்’ பெற்றுக் கொண்டது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (17-10-2024) பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும், சென்னை நோக்கி நகர்ந்து வந்த அந்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி-நெல்லூர் இடையே இன்று கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்தது. இந்த நிலையில், நேற்று காலை முதல் சென்னையில் லேசான மழையே பெய்து வந்தது. அதிலும், ஓவர் சில இடங்களில் மழை பெய்யவும் இல்லை.
இதனால், 4 மாவட்டங்களுக்கு விடுத்த ரெட் அலெர்ட்டை நேற்று இரவு வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்று கொண்டது. இதன் காரணமாக, சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று (17-10-2024) வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியரான ரஷ்மி சித்தார்த் அறிவித்திருந்தார்.
அதே போல சென்னையைத் தொடர்ந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் இன்று (17-10-2024) பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.