அரசியலில் இருந்து ஓய்வு!ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவிப்பு

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் அதிக குழப்பங்கள் நிலவி வருகின்றது.கட்சியில் உள்ள அனைவரும் அதிகாரப் போட்டியில் உள்ளனர்.அதேபோல் பதவிக்கும் ஆசைப்பட்டு வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.பிரிந்து சென்ற பன்னீர்செல்வமும் பின்னர் பழனிசாமியுடன் இணைந்து துணை முதல்வராக பதவி வகித்து வருகின்றார்.
மேலும் சசிகலா அணியில் அவர் சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ளார் .சுதாரித்த தினகரன் மட்டும் வழக்கில் இருந்து தப்பி தற்போது ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வாகவும் உள்ளார்.பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியையும் தொடங்கினர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சும்மா இல்லாமல் தானும் ஒரு கட்சியை ஆரம்பிப்பேன் என்று எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை ஆரம்பித்தார்.

இந்த நிலையில் தீபா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளர்.அந்த அறிவிப்பில் ,முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன்.யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். எனக்கென்று குடும்பம் உள்ளது, அதுதான் எனக்கு முக்கியம்.குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை.
பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன்.விருப்பம் இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதை இதோடு நிறுத்த வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025