ஓய்வு பெரும் வயது 60 -அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் நேற்று தொடங்கியது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில், தமிழகத்தில் அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.59-ல் இருந்து 60-ஆக உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும்.மே மாதம் வரை பொருந்தும்
இந்த உத்தரவு, தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது மே மாதம் 31-ந்தேதி அன்று பணியில் இருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் ஓய்வுபெறும் வயது 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஓய்வு பெரும் வயது 60 -அரசாணை வெளியிட்ட தமிழக அரசு#TNGovtEmployees | #RetairingAge pic.twitter.com/b3ABy3684e
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) February 26, 2021