விழுப்புரம் மாவட்டம் சுதாகர் நகரை சேர்ந்த விழுப்புரம் இந்திரா என்பவர் பெட்டிக்கடை வைத்திருந்தார் அத்துடன் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி அதிகாலை அவர் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு அவரது கணவர் நடராஜன் தகவல் கொடுத்திருந்தார். அந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்தனர். இந்திராவின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்திரா வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால் அதில் பணம் கொடுக்கல்-வாங்கலில் கொலை செய்யப்பட்டாரா?அல்லது அவர் அணிந்திருந்த நகைகள் மாயமானதால் கொள்ளையர்கள் கொலை செய்தார்களா? என பல கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்திராவின் தம்பி வெங்கடேசன் தனக்கு நடராஜன் மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் கூறினார். பின்பு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மனைவியை கொலை செய்ததை அவரே ஒப்புக்கொண்டார். அரசுப்பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியரான நடராஜனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளன. முதல் மனைவி இந்திராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருக்கோவிலூரில் இரண்டாவது மனைவியான லீலாவுடன் இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 5-ம் தேதி நள்ளிரவு இந்திராவை பார்க்க நடராஜன் வந்தபோது இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு கோவத்தில் இந்திராவின் தலையில் அங்கிருந்த இரும்பு கம்பியால் அடித்தார். பின்னர் அவரது உடல் மீது பழைய துணிகளை போட்டு மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.
நடராஜன், திருட்டு சம்பவம் போல் இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டிலிருந்த 8 சவரன் நகையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். மறுநாள் இரண்டாவது மனைவி வீட்டிற்கு வந்து தனது மனைவி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். நடராஜனிடம் வாக்குமூலத்தை பெற்ற போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…