என் மீது கூறப்படும் குற்றசாட்டுகள் தவறு.! பொன் மாணிக்கவேல் விளக்கம்.!

Default Image

58 வருடமாக யாரும் கைது செய்யாத ஒரு ஆளை (தீனதயாளன் ) நான் தான் முதன் முதலாக கைது செய்தேன். என்னை போய் அவனை விட்டுடீங்கனு சொல்றது எந்த விதத்தில் நியாயம். ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் விளக்கம். 

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பாக ஓய்வுபெற்ற சிலை கடத்தல் சிறப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் , சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தீனதயாளன் உடன் சேர்ந்து கொண்டு செயல்பட்டதாக பொன் மாணிக்கவேல் மீது குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற சிலை கடத்தல் சிறப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் இன்று செய்தியாளர்களை சந்தித்து தன் மீதான குற்றசாட்டு குறித்து விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், ‘ 1958இல் 58 வருடமாக யாரும் கைது செய்யாத ஒரு ஆளை (தீனதயாளன் ) நான் தான் முதன் முதலாக கைது செய்தேன். என்னை போய் அவனை விட்டுடீங்கனு சொல்றது எந்த விதத்தில் நியாயம். 83இல் இருந்து காவல்துறையில் வேலை பார்க்கிறேன். இதுவரை 831 சிலைகளை எனது குழுவுடன் கைப்பற்றியுள்ளேன்.  2012 இல்விசாரணை ஆரம்பித்து 2016இல் அவரை (தீனதயாளன்) கைது செய்துள்ளேன். என குறிப்பிட்டுளளார்.

30 நாள் குற்றவாளிவீட்டில் இருந்து சிலைகளை மீட்டுள்ளேன். 90 நாள் தீனதயாளன் சிறையில் இருந்தார் . என குறிப்பிட்ட அவர், நான் ஓய்வுபெற்று இரண்டே முக்கால் வருடம் ஆகிவிட்டது. நான் வெளியே வந்துட்டேன். ஆனால் இப்போது வரையில் எனக்கடுத்து யாரும் இன்னும் சார்ஜ் சீட் (புதிய வழக்குப்பதிவு) செய்யவில்லை. இன்னும் குற்றவாளி வீட்டில் கடத்தப்பட்ட பொருட்கள் அப்படியே இருக்கிறது. என குற்றம் சாட்டினார்.

மன்னன் ராஜராஜசோழன் சிலை கண்டறிய யார் உதவி செய்தது?
2012 முதல் 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 18,000 கொலை வழக்கு பதிவாகியுள்ளது. அதில் காவல்துறையினர் ஒரு அப்புருவர் கூட எடுக்கவில்லை. ஆனால் நாங்கள் 30 சிலை கடத்தல் வழக்கில் 9 அப்புருவர்களை எடுத்துள்ளோம். குற்றவாளிகளிடம் பழகி மூளைசலவை செய்து அவர்கள் மூலம் தகவல்களை பெற்று பல்வேறு நாடுகளில் உள்ள சிலைகளை மீட்டுள்ளோம் என தனது விளக்கத்தை செய்தியாளர்களிடம் ஓய்வுபெற்ற சிலை கடத்தல் சிறப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்