தமிழக அரசிடம் ஒரு கோடி இழப்பீடு கேட்டு விருப்ப ஓய்வு பெற்ற அதிகாரி வழக்கு!
பதவி உயர்வு வழங்காத விவகாரத்தில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி வழக்கு.
உரிய தகுதிகள் இருந்தும் பதவி உயர்வு வழங்கவில்லை என விருப்ப ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி ராமசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதில், இதுநாள் வரை தனக்கு ஓய்வு கால பலன்களை தரவில்லை என்றும் பதவி உயர்வு வழங்காத விவகாரத்தில் ரூ.1 கோடி இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கையினை செப்டம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து.