தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக ஓய்வு பெற்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நியமனம்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற புஷ்பா சத்தியநாராயணா தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராக நியமனம் செய்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என மத்திய அரசு அறிவிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2013-ல் பதவியேற்றார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கடந்த 1960-ம் ஆண்டு பிறந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் கடந்த 1985-ல் சட்டப்படிப்பை முடித்து, வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.
28 ஆண்டுகள் வழக்கறிஞராக சிவில் வழக்குகளில் ஆஜராகி வந்தார். சென்னை உயா்நீதிமன்றத்தில் மூத்த பெண் நீதிபதியாகப் பதவி வகித்து வரும் புஷ்பா சத்தியநாராயணா பிப்.27 ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…