ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கடந்த 12ஆம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக 4.8 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய முதல் நாள் இரவே திடீரென்று ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் குளிர்விப்பான் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் தெரிவித்தது.
இதனையடுத்து ஸ்டெர்லைட் குழுவினருடன் இணைந்து, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினர் உற்பத்தி பிரிவில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தற்போது குளிர்விப்பான் பகுதியில் பழுது சரி செய்யப்பட்ட நிலையில், ஆலையில் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. இன்று பிற்பகல் முதல் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் லாரி மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்…