பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்களில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தவர்களின் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ம் கல்வியாண்டில் மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்வில் மேல்நிலை முதலாமாண்டு (அரியர்) மற்றும் இரண்டாமாண்டு பொது தேர்வு எழுதிய மாணவர்களில் சிலரது விடைத்தாள்களில் உள்ள மதிப்பெண்களை மறுக்கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்த விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண்கள் மாற்றம் உள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்த மாணவர்களில் மதிப்பெண்களில் மாற்றமுடையவர்களின் பதிவெண்களின் பட்டியல் நாளை பிற்பகல் 2 மணிக்கு http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள நோட்டிஃபிகேஷன் பக்கத்தில் வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் பதிவெண்கள் இல்லாத மாணவர்களின் மதிப்பெண்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், மதிப்பெண் மாற்றமுடைய மாணவர்கள் உடனடியாக மேற்கண்ட இணையதளத்தில் தங்களது பதிவெண்கள் மற்றும் பிறந்ததேதியை பதிவு செய்து திருத்தப்பட்ட மதிப்பெண்களுடன் கூடிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…