தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காணொளி மூலம் கலந்துகொண்டபின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கொரோனாவை தடுக்க தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்படுவது கொரோனா பரவலை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுக்கும் நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…