கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 15 நாட்களுக்கு நிறுத்திவைப்பு..!
கொடைக்கானலில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக் காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கு சுற்றுலா பயணிகளிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அந்த கட்டுப்பாடுகளை 15 நாட்களுக்கு நிறுத்திவைத்து வனத்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக, சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு சான்றிதழ், இன்சூரன்ஸ் உள்ளிட்டவை தேவை எனவும் அறிவிப்பு வெளியானது.