எலி மருந்து, பால்டாயில் விற்பனைக்கு கட்டுப்பாடுகள்.. சாணம் பவுடருக்கு விரைவில் தடை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Default Image

தனி நபர்களுக்கு எலி மருந்து, பால்டாயில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல சுகாதார நிறுவனத்தில், உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 முதல் 16,000 பேர் தற்கொலையால் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கை விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என கூறினார்.

தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்பவர்கள் 15 – 20% மட்டும் உள்ளார்கள். மற்றவர்கள் எலி மருந்து, பால்டாயில் மற்றும் சாணம் பவுடர் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள் என தெரிவித்தார். விஷப் பொருட்களின் கலவை கொண்ட சாணம் பவுடர் உற்பத்தி செய்யப்படுவதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் அதற்கான தடை அறிவிப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எலி மருந்து, பால்டாயில் போன்றவைகளை கடைகளில் பாதுகாப்பாக லாக்கரில் வைத்து விற்க வேண்டும் என்றும் வெளிப்படையாக தெரியும் வகையில் விற்கக்கூடாது எனவும் கூறினார். அதேபோல் தற்கொலைக்கு காரணங்களாக இருக்கும் எலி மருந்து, பால்டாயில் உள்ளிட்டவற்றை தனி ஒருவருக்கு வழங்கக்கூடாது என்றும் ஓரிருவர் சேர்ந்து வந்தால் மட்டுமே வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

தனி நபர்களுக்கு எலி மருந்து, பால்டாயில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்றும் எலி மருந்து, பால்டாயில் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அரசாணைகளை துறை அலுவலர்கள் மூலம் விடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், 104 ஹெல்ப்லைன் இதுவரை நீட் யுஜி எழுதிய சுமார் 10,000 மாணவர்களை அணுகி அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கியுள்ளது. ஆலோசகர்கள் பெற்றோர்களிடம் பேசி, தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர். பல மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் மருத்துவ படிப்புகளை படிக்க வற்புறுத்துவதாக புகார் தெரிவித்தாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்