#BREAKING: வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகள்.., ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை..!
அனைத்து மதத்தலைவர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை.
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், வழிக்காட்டு தளங்களில் நேரம் குறைப்பது தொடர்பாகவும், வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி அனைத்து மதத்தலைவர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மதம் சார்ந்த திருவிழாக்கள் கூட்டங்களுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தடை விதித்துள்ள நிலையில் இந்த ஆலோசனை பெற்று வருகிறது.