இனி திருமணம்,இறப்பு நிகழ்சிகளில் அதிக பேர் பங்கேற்க தடையில்லை – தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில் தொடங்கியதில் ,அதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.இந்த வேளையில்,கொரோனா பரவலின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில்,கட்டுப்பாடுகளை நீக்கிக் கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில்,தமிழகத்தில் இதுவரை இருந்த பெரும்பாலானகொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,
- திருமணம்,இறப்பு நிகழ்சிகளில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
- சுய விருப்பத்தின்பேரில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள மக்கள் முன்வரவேண்டும்.
- இருப்பினும்,பொது மக்கள் முகக் கவசம் அணிவது,கை கழுவுதல், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.