சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதிகளுக்கு ‘சீல்’ வைத்து வருகின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதனையடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் குறைந்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குப்பட்ட பகுதியில் ஏற்கனவே 66 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வெகுவாக குறைந்து 24 தெருக்களுக்கு மட்டும் ‘சீல்’வைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி : ஐபிஎல் 2025-ன் ஆறாவது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.…
அகமதாபாத் : ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரும் பஞ்சாப் கிங்ஸ் நட்சத்திர வீரருமான மார்கஸ் ஸ்டோய்னிஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின்…
அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப்…
தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின்…
சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல…