சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்துள்ளது – சென்னை மாநகராட்சி

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதிகளுக்கு ‘சீல்’ வைத்து வருகின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதனையடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் குறைந்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குப்பட்ட பகுதியில் ஏற்கனவே 66 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வெகுவாக குறைந்து 24 தெருக்களுக்கு மட்டும் ‘சீல்’வைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெரும் சோகம்.! அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்!
March 26, 2025
GT vs PBKS: பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிரட்டிய பஞ்சாப்.! தோல்வியை தழுவிய குஜராத்.!
March 25, 2025
GT vs PBKS: பொளந்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்… மிரண்டு போன குஜராத்துக்கு இது தான் டார்கெட்.!
March 25, 2025
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.!
March 25, 2025