கொரோனா அதிகரிப்பின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு உணவகங்கள் மூடப்படும் என்று உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில்,மே 10-ம் தேதி முதல் 24ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
மக்கள் இந்த தளர்வுகளை பயன்படுத்தி அலட்சியமாக வெளியே சுற்றுவதால்,24-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும், ஒரு வாரத்திற்கு, ஜூன் 7-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும்,பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில்,அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை,உணவகங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா அதிகரிப்பின் காரணமாக நாளை முதல் ஒரு வாரத்திற்கு உணவகங்கள் மூடப்படும் என்று உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்,உணவுத் தேவைப்படுவோர் ஆங்காங்கே எழுதி ஒட்டப்பட்டுள்ள ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…