பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீக்கு பணிபுரிந்த இடத்தில் அஞ்சலி
நேற்று முன்தினம் ஸ்கூட்டியில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் வந்துகொண்டிருந்தபோது அவர் மீது சாலையில் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அந்த சமயத்தில் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.பல அரசியல் கட்சித் தலைவர்களும் பேனர்கள் வைப்பதை தவிர்க்குமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தினர்.
She is my office colleague. May her soul ‘REST IN PEACE’???????? #WhoKilledShubashree pic.twitter.com/vKYrnMeK0W
— Anbazhagan Sekar (@anbazhagan16) September 13, 2019
சுபஸ்ரீ துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.தனது பணியினை முடித்து வரும் வழியில் தான் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில் பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ பணிபுரிந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.இதனை அவருடன் பணிபுரிந்த நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.