கொரோனாவுக்கு திருத்தணிகாசலம் கண்டுபிடித்த மருந்தின் நிலை குறித்து பதிலளிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்!

கொரோனாவுக்கு திருத்தணிகாசலம் கண்டுபிடித்த மருந்தின் நிலைக்குறித்து மத்திய, மாநில அரசு ஒரு வாரத்திற்கும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அச்சுறுத்தி வரும் காரணத்தினால், அதற்க்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி, சமூக வலைத்தளங்களில் விடீயோக்களை வெளியிட்டவர் திருத்தணிகாசலம்.
இவர் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குனர் புகாரளித்த நிலையில், புகாரின் அடிப்படையில் அவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கண்டுபிடித்ததாக கூறும் மருந்தின் நிலைக்குறித்து மத்திய, மாநில அரசு இன்னும் ஒரு வாரத்திற்கும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.