துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன், கி.ரா-வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் கிராமத்தில் பிறந்த கி.ராஜநாராயணன் அவர்கள் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். விவசாயம் பார்த்து வந்த இவர் அதன் பின் பல நூல்களை எழுதி, கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்பட கூடிய அளவிற்கு எழுத்தாளராக புகழ்பெற்றார்.
கோபல்லபுரத்து கிராமம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், சிறுகதை, நாவல், குறுநாவல், கிராமியக் கதைகள் என பல்வேறு இலக்கியங்களை இயக்கியுள்ளார். தமிழக அரசு மற்றும் கனடா நாட்டின் விருதுகளை பெற்ற இவர், புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் வயது முதிர்வு காரணமாக இவர் காலமானார். இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் இவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
புதுச்சேரியிலிருந்து இவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டியில் உள்ள அவரது சொந்த ஊரான இடைசெவல் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, கி.ரா. உடலுக்கு சபாநாயகர் அப்பாவு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன்,லோக்சபா எம்.பி.க்கள் கனிமொழி, சு.வெங்கடேசன் ஆகியோர் இறுதி மரியாதையை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன், கி.ரா-வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. எழுத்தாளர் ஒருவருக்கு அரசு மரியாதை செலுத்தி அடக்கம் செய்வது இதுவே முதல்முறையாகும்.
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…
சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…