அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில்… மறுவரையறை முடிவை ஒத்திவைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றம்!
நியாயமான தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுவின் 2வது கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த நிறைவு பெற்றது.
இந்த கூட்டத்தில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் தொடக்க உரையாக தமிழ்நாடு முதலமைச்சார் மு.க ஸ்டாலின் உரையாற்றிய பின், துணை முதலவர் உதயநிதி தொகுதி மறு சீரமைப்பால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கினார். இதை தொடர்ந்து, கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில்வருகை தந்திருந்த மாநில முதலமைச்சர்கள் அடுத்தடுத்த உரையாற்றினர்.
இறுதியில் தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று 3 மாநில முதல்வர்கள், 7 மாநில பிரதிநிதிகளுடன் இக்கூட்டத்தில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தொகுதி மறுசீரமைப்பு ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தீர்மானம் நிறைவேற்ற பின், தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் விருப்பத்தை ஏற்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான விவாதங்களுக்கு மேலும் முக்கியத்துவம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.