#BREAKING : இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்…!

Default Image

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.

தமிழக சட்டப்பேரவையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய தமிழக முதல்வர் அவர்கள், சட்டப்படியான சமத்துவம் மற்றும் சட்டப்படியான பாதுகாப்பை எந்த அரசும் மறுக்க முடியாது என்றும், 1956 குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில், ஒரு நபர் குடியுரிமை பெற மதம் என்பது அடிப்படையாக இல்லை.

ஆனால் தற்போது மத்திய  அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் என்பது, மதத்தை அடிப்படையாக வைத்து குடியுரிமை வழங்க வேண்டும் என்ற வகையில்  அமைந்துள்ளது. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என்ற விஷயத்தை வலியுறுத்தி தான் தனி தீர்மானமாக கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த 2019-ல் இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம் மதசார்பின்மை கோட்பாடு, மத நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்றும், அகதிகளாக வருவோரை மதரீதியாக பாகுபடுத்தி பார்க்கும் வகையில் சி.ஏ.ஏ சட்டம் உள்ளதாகவும், இந்த குடியுரிமை திருத்த சட்டம் இலங்கை தமிழர்களுக்கு மத்திய  அரசு செய்யும் துரோகம் என்றும், இலங்கை தமிழர்கள் குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை என்றும்  குற்றம்சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்