தமிழ்நாடு பட்ஜெட்: “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு..!
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர், தேர்தல் வாக்குறுதியின் படி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்பட்டுள்ளது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அனைத்து மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உரிய சரிபார்த்தலுக்கு பின்னர், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.