3 மாதங்களுக்கு ஒரு முறை திமுக இளைஞரணியின் மண்டல மாநாடு-திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம்

Default Image

திமுக இளைஞரணி மண்டல மாநாடு 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் என மொத்தம் 474 பேர் பங்கேற்றனர். கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இளைஞரணி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது .இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம். தமிழகத்தில் தபால் & ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் பணியில் அமர்த்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

தேசிய கல்விக்கொள்கை வரையறையை திரும்பப்பெற வேண்டும் . 3 மாதங்களுக்கு ஒரு முறை திமுக இளைஞரணியின் மண்டல மாநாடு நடத்தப்பட்டு பின்னர், மாநில மாநாடு நடத்தப்படும்.திமுக இளைஞரணி உறுப்பினர்களின் வயது வரம்பு 35 வரை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், 30 லட்சம் பேர்களை இளைஞரணியில் சேர்ப்பது என்றும்  நிறைவேற்றப்பட்டுள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்