குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் -திமுக கோரிக்கை நிராகரிப்பு

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்த நிலையில் இன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த கூடத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.இதற்கு பதில் அளித்த சபாநாயகர் தனபால், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.