வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – மு.க.ஸ்டாலின்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் தெரிவித்து விட்டார்.மூன்று மசோதாக்களின் விதிகள் சட்டமாகி விட்டது. ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடைய மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,அண்ணல் காந்தி அடிகள் பிறந்தநாளான, வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்து, அ.தி.மு.க. ஆதரித்துள்ள மேற்கண்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக, அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், தங்களது கிராமசபைக் கூட்டத்தில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
“அண்ணல் காந்தி அடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் அனைத்து கிராமசபைக் கூட்டங்களிலும் – பாஜக அரசு கொண்டுவந்து, அதிமுக ஆதரிக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக – கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிடுக”
-கழக தலைவர் @mkstalin வேண்டுகோள்.
Link: https://t.co/4OeEEyhZ0J pic.twitter.com/4JHK9T9bt1
— DMK (@arivalayam) September 30, 2020