ஆன்லைன் மது விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து 43 நாள்களுக்கு பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் நிபந்தனையின் பேரில் இயங்க அனுமதி வழங்கியது.
ஆனால், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கூறி மனு தொடரப்பட்டது. அந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது. மேலும், ஆன்லைன் மூலம் மட்டும் மது விற்பனை செய்யலாம் என அறிவித்தது.
இந்த, உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மது விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…