எம்.எல்.ஏ. பதவியை தினகரன் ராஜினாமா செய்ய வலியுறுத்தி போட்டி அமமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமமுக செய்தி தொடர்பாளராக இருக்கும் புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம் அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமமுக கட்சியின் சார்பாக வெளியான செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் 14 பேர்பெயர் இடம் பெற்றது.ஆனால் அதில் புகழேந்தியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் மீண்டும் அமமுக வட்டாரத்தில் சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று கோவை மண்டல அமமுக கூட்டம் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்.எல்.ஏ. பதவியை தினகரன் ராஜினாமா செய்ய வலியுறுத்தி போட்டி அமமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் பின்னர் புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,டிடிவி தினகரன் பின்னால் இனி பயணிக்க முடியாது. நமது கனவு பொய்த்துவிட்டது இனி தினகரனால் அரசியலில் நிலைக்க முடியாது.இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் யாரிடம் விலைபோனார் தினகரன்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாவிட்டால் அமமுக சகாப்தம் முடிவுக்கு வரும்.அதிமுக கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற சிப்பாய்களாக செயல்படுவோம்.தினகரனிடம் எந்த ஸ்லீப்பர் செல்லும் கிடையாது என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…