வெள்ள அபாயம்: கார்களை மேம்பாலத்தில் பார்க் செய்த சென்னை வாசிகள்.!
கனமழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மக்கள், இப்போதே கார்களை மேம்பாலத்தில் பார்க் செய்யத் தொடங்கியுள்ளனர்.
சென்னை : வடகிழக்கு பருவமழை இந்த முறை மிகத் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 3 டெல்டா மாவட்டங்களுக்கு நாளை (அக்.15) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை மறுநாள் (அக். 16) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில், கடந்த கால வடகிழக்கு மழை சென்னைவாசிகளுக்கு பல அனுபவங்களை நினைவுபடுத்துகிறது. குறிப்பாக கடந்தாண்டு பெய்த மழையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், ரெட் அலர்ட் எதிரொலியாக பலரும் தங்களது வாகனங்களை பாதுகாக்க மேடான பகுதிகளில் பார்க் செய்து வருகின்றனர். அந்த வகையில், வேளச்சேரி பாலம் கார் பார்க்கிங்காக மாறி வருகிறது. மேலும், அத்தியாவசிய பொருட்களையும் முன்கூட்டியே வாங்கி வைக்க தொடங்கியுள்ளனர்.
Boat ஷோக்கு தயாராகும் Chennaites!#RedAlert #Velachery #chennairain pic.twitter.com/SpHu9dLWTa
— kittu (@kittu_journal) October 14, 2024