கோவை மாநகராட்சியை இழிவுபடுத்தி, தனிமைப்படுத்தப்பட்ட வீட்டிற்கு வெளியே பேனர் வைத்த ஹோப் கல்லூரி சந்திப்பில் வசிப்பவரை சிங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூரில் உள்ள ஹோப் கல்லூரி பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டில் கொரோனா இல்லாத 4 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்து அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தது கோவை மாநகராட்சி. மாநகராட்சியை கண்டித்து சில தினங்களுக்கு முன்பு அக்குடும்பத்தினர் பேனர் வைத்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பேனர் வைத்த குடும்பத்தினர் மீது மாநகராட்சி நிர்வாகம் புகார் அளித்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் பேனர் வைத்த ஜி. இளவரசன் என்பவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிரிவு 4 தமிழ்நாடு திறந்தவெளி (சிதைவு தடுப்பு) சட்டத்தின் கீழ் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் தனது வீட்டிற்கு வெளியே தடுப்புகளைத் தூக்கி COVID-19 தனிமைப்படுத்தலை மீறியதாகவும், பேனரை அகற்றச் சென்ற கார்ப்பரேஷன் தொழிலாளர்களைத் தடுக்க முயன்றதாகவும் போலீசார் குற்றம் சாட்டினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் கைது செய்யப்பட்டார், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…