ரயில் பயணிகளுக்கு ஓர் முக்கியயறிவிப்பு!நாளை முன்பதிவு கவுண்டர்கள் செயல்படாது …
நாளை பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு ஒத்திகைக்காகச் பிற்பகல் மற்றும் நள்ளிரவில் குறிப்பிட்ட நேரத்தில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ரயில்வே பயணிகள் முன்பதிவு செய்ய முன்பதிவு அமைப்பு இயங்காது எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்துத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு ஒத்திகைக்காகச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பயணிகள் முன்பதிவு அமைப்பு பிப்ரவரி 4ஆம் தேதி பிற்பகல் 2.05 மணி முதல் 3.45வரை ஒருமணி 40 நிமிடங்களுக்கும், 4ஆம் தேதி இரவு 11.30மணி முதல் 5ஆம் தேதி 1.45மணி வரை இரண்டேகால் மணி நேரமும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரங்களில் சென்னை மண்டலத்துக்குட்பட்ட தெற்கு, தென்மத்திய, தென்மேற்கு ரயில்வேக்களில் உள்ள முன்பதிவு மையங்களில் பயணச்சீட்டு முன்பதிவு, ரத்துசெய்தல், இடம் இருப்பது பற்றிய விசாரணை ஆகியவை செய்ய முடியாது.
இணையத்தளத்திலும் கூட இந்த மண்டலப் பகுதிகளில் இருந்து புறப்படுவதற்கான பயணச்சீட்டை இந்தக் குறிப்பிட்ட நேரங்களில் முன்பதிவு செய்ய முடியாது. அதேநேரத்தில் இந்த மண்டலத்தைத் தவிர மற்ற மண்டலப் பகுதிகளில் இருந்து புறப்படுவதற்கான பயணச்சீட்டைஇணையத்தளத்தில் முன்பதிவு செய்வதில் எந்தப் பாதிப்பும் இருக்காது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.