பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு நியாயமற்றது – தமிழக அரசு
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு வாதம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது என்பது நியாயமற்றது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமத்துவத்திற்கான கொள்கைகைக்குள் இதை வகைப்படுத்த முடியாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பொருளாதார அளவுகோலின் கீழ் இடஒதுக்கீடு கொண்டு வருவது அரசியல் சாசன பிரிவு 14-ஐ மீறும் செயலாகும் என்றும் இந்திரா சாவ்னி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உள்ளதும் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.