தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு – கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்!
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என பேரவையில் தகவல்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, இந்த துறைகள் சார்ந்த விளக்க குறிப்பு மற்றும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பப்படும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதில், தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும். IIT, IIM உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் OBC பிரிவுக்கான 27% இட ஒதுக்கீடை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு வலியுறுத்துவதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.