#BREAKING: அரசு பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 30 இருந்து 40 % உயர்வு..!
அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையின் கடைசிநாளான இன்று மனிதவள மேலாண்மைத் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பி.டி.ஆர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 30 இருந்து 40% ஆக அதிகரிப்பு எனவும்,அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் தமிழக இளைஞர்கள் 100% நியமனம் செய்யும் பொருட்டு tnpsc நடத்தப்படும்.
தமிழ்நாடு அரசு பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என அறிவித்தார். கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். முதல் தலைமுறை பட்டதாரிகள் அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவருக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என் அறிவித்தார்.
அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானால் நேரடி நியமன வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் அதிகரிப்பு என தெரிவித்தார்.