அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்துக என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமல்படுத்தும் வகையில் திருத்தங்களை கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அரசு பணியில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி 2016-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இதனடிப்படையில் 30% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீதம் போட்டியிடும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டப்பிவை எதிர்த்தும், பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய நடைமுறையை எதிர்த்தும் பல வழக்குகள் தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு வழக்கை முடித்து வைத்தது. அப்போது, 30 சதவீத பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நிரப்பிவிட்டு அதன் பின்னர் சமுதாய இடஒதுக்கீட்டை தமிழக அரசு தேர்வாணையம் பின்பற்றி காலியிடங்களை நிரப்புவது வேதனைக்குரியது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. இந்த நடைமுறை படி பெறப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறையாக இருக்காது.
அதே சமயம் தகுதி அடிப்படையில் பணி நியமனம் பெறும் உரிமைகளை மறுக்க முடியாது. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, முதலில் பொது பிரிவு, சமூக ரீதியிலான ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பி விட்டு, அதில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு பூர்த்தியாகவில்லை என்றால் எத்தனை இடங்கள் நிரப்ப வேண்டுமோ, அத்தனை இடங்களில் பெண்களை நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டனர். எனவே, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப எதிர்காலத்தில் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் விதிகளில் திருத்தங்களை கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…