வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு 6 மாத காலத்திற்கு தற்காலிகமானது தான் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவுடார்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் ஆர்பி.உதயகுமார் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு 6 மாத காலத்திற்கு தற்காலிகமானது தான் என தெரிவித்தார்.
தொடர்ந்து, பேசிய அவர் இன்று திட்டமிட்டு என்ன பொய் செய்தி பரப்புகிறார்கள்; 68 சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு 7.5 சதவீதம் எனவும், சில குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு 10.5 சதவீதம் எனவும், இதர சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு 2.5 சதவீதம் என்று சொல்லுகிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல இப்போது சவுடார் பட்டியில் இருந்து சத்தியமாக சொல்லுகிறேன்.
மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்தார். அமைச்சரின் பேச்சால் வன்னியர் சமூகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பாமகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…