தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி பா.ம.க சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றது. இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் பாமக கூட்டணி தொடருமா..? என கேள்வி எழுந்து வந்த நிலையில், இன்று இட ஒதுக்கீடு பற்றி பத்திரிகையாளர் சந்திப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இணையம் வழியாக பேசினார்.
அப்போது பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு குறித்து அதிமுக அரசு ஜனவரி 31-க்குள் அறிவிக்கவில்லை எனினும் தேர்தல் கூட்டணி பற்றி முடிவு செய்து அறிவிப்போம் என தெரிவித்துள்ளார். மேலும், ஜனவரி 31-க்குள் உள் ஒதுக்கீடு குறித்து பேசு வார்த்தை நடந்த முடியாத நிலை ஏற்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பாமக நிர்வாகக்குழு ஜனவரி 31-ஆம் தேதி கூடும் கூட்டத்தில் பேசுவோம் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, பிப்ரவரி முதல் வாரத்தில் பொதுக்குழுவை கூட்டி கூட்டணி தொடர்பாக முடிவெடுப்போம் என தெரிவித்தார். சமீபத்தில் தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் உடன் வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசினார். பின்னர், சந்திப்பு குறித்து பேசிய அவர் வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…